மேற்கு வங்க முர்ஷிதாபாத் பகுதியைச் சேர்ந்தவர் நூர் ஜமால் ஷேக். இவர் சவுதி அரேபியாவில் கடந்த 5 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில், அவர் தனது மனைவி மீது காவல்நிலையத்தில் பரபரப்பான புகார் ஒன்றை அளித்துள்ளார். அவர் அளித்த புகாரில், “நான் சவுதி அரேபியாவில் பணியாற்றி வந்தேன்.
அதனால் நான் வங்கியில் வைப்பு செய்து வைத்த பணத்துக்கு எனது மனைவிக்கு தான் பொறுப்பளித்திருந்தேன்.
இந்த நிலையில், நான் வெளிநாட்டிலிருந்து வரத் தாமதமானதால் என் மனைவி என்னைவிட்டுப் பிரிந்து சென்றுவிடுவதாகக் கூறினார். அதன் பிறகு அவர் என்னை பிரிந்து சென்று விட்டார் என்பதால், வங்கியில் வைப்பு செய்த பணத்தை எடுக்க இந்தியா வந்தேன். அப்போதுதான் என் பணம் வங்கியிலிருந்து எடுக்கப்பட்டுவிட்டதை அறிந்தேன். எனது இறப்புச் சான்றிதழைக் காண்பித்து, என் மனைவி பணத்தை எடுத்துச் சென்றுவிட்டதாகக் கூறப்பட்டது. அதுமட்டுமில்லாமல்.
இந்த சான்றிதழை வைத்து எனது சொத்துகளை அவர் பெயருக்கு மாற்றிக்கொண்டுள்ளார் என்பதும் தெரிய வந்தது.