கனடாவில் பாரிய கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் 15 வயதான சிறுமி ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Oakville பகுதியில் இவ்வாறு சிறுமியை கைது செய்துள்ளதாக ஹால்டன் போலீசார் தெரிவிக்கின்றனர்.
இந்த சிறுமி ஆறு வாகனங்களை களவாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வாகனங்கள், பணம் மற்றும் பெறுமதி வாய்ந்த பொருட்கள் என்பனவற்றை இந்த சிறுமி கொள்ளையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
களவாடப்பட்ட வாகனம் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்தபோது அந்த சிறுமையை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஸகாப்ரோ பகுதியில் வைத்து குறித்த சிறுமி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சிறுமியிடம் இருந்து தங்க ஆபரணங்கள், வாகனங்கள், பணம் உள்ளிட்ட பல்வேறு பெறுமதியான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சிறுமி போலி துப்பாக்கி ஒன்றை வைத்திருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய சிறுமி மிசிசாகா பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.