கனடாவில் வாகன விபத்தில் 22 வயதான யுவதி பலி

ஹம்பர்க்கில் இடம்பெற்ற வாகன விபத்தில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கனடாவின் கிட்ச்னர் ஹம்பர்க் வில்மோர்ட் நகரின் ஒக்ஸ்போர்ட் மற்றும் புன்கிடொட்ஸ் வீதிகளுக்கு அருகாமையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

இந்த விபத்தில் வாகனத்தைச் செலுத்திய 22 வயதான யுவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

வாகனத்தில் பயணித்த 16 வயதான சிறுமி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மற்றைய வாகனத்தைச் செலுத்திய 19 வயதான இளைஞனுக்கும் காயங்கள் ஏற்பட்ட போதிலும் உயிர் ஆபத்து கிடையாது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்து குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் காணொளிகள் அல்லது ஏதேனும் தகவல்கள் இருந்தால் அறிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.