கனடாவுக்கு அனுப்புவதாக கூறி பாரிய நிதி மோசடி  – மைத்திரியின் ஊடகச் செயலாளர்  கைது

கனடாவுக்கு அனுப்புவதாக கூறி ஐந்து லட்சம் ரூபாய் மோசடி செய்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஊடகச் செயலாளராக பணியாற்றிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரை எதிர்வரும் நவம்பர் மாதம் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் திலின கமகே நேற்று உத்தரவிட்டுள்ளார்.
பொலன்னறுவையைச் சேர்ந்த ரசிக பண்டார என்ற நபரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொலன்னறுவை மாவட்டத் தலைவர் வசந்த ஜயவர்தனவின் தனிப்பட்ட செயலாளர் மொஹமட் ஷபீக் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர் பொலிஸ் நிலையத்திற்கு வந்துள்ளார்.
விசாரணையின் பின்னர் குற்றச்சாட்டை படித்து காண்பித்த பின்னர் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.