கார்த்திகை பூ விவகாரம் : பொலிஸாருக்கு எதிராக ஆசிரியர் சங்கம் கடும் கண்டனம்

பாடசாலை நிகழ்வுகள் இராணுவ – பொலிஸ் தலையீடுகள் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிட நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் தீலீசன் (Deepan Thilesan) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடகங்களுக்கு இன்று திங்கட்கிழமை (01)   தீபன் திலீசன் அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பிலையே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

“பாடசாலைகளில் நடைபெற்று வரும் இல்ல விளையாட்டு நிகழ்வுகளில் அலங்கரிக்கப்படும் செயற்பாடுகள் தொடர்பில் குறிப்பாக, வடக்கு, கிழக்கு மாகாண பாடசாலைகளில் பொலிஸாரினதும் இராணுவத்தினரதும், அரச புலனாய்வாளர்களினதும் அச்சுறுத்தல் இடம்பெற்றுவருவது தனிமனித அடிப்படை உரிமை மீறலாகும்.

இலங்கை அரசின் சட்ட வரையறைக்குற்பட்டு கருத்தியல், கலை, குறியீட்டு மூலமாக சமூகம் சார் சிந்தனைகளை வெளிப்படுத்தும் போது, அதனை அரச இயந்திரங்களால் நசுக்கும் செயற்பாடுகள் நடைபெறுவதற்கு அனுமதிக்க முடியாது.