கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கனகபுரம் வீதியில் நேற்று நள்ளிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
வேகமாக பயணித்த வாகனத்தில் ஏற்பட்ட திடீர் பழுது (ஸ்ரேரிங் ரொட் உடைத்ததில்) காரணமாக சாரதியின் கட்டுப்பாட்டை மீறி கப் ரக வாகனம் விபத்துக்குள்ளானது.
விபத்தில், வீதி அருகில் உள்ள இலங்கை தொலைத் தொடர்பு வலையமைப்புகளை மோதி விபத்துக்குள்ளானது.
இரண்டு தொலைதொடர்பு தூண்கள் சேதமடைந்ததோடு, வலையமைப்பு வயர்களும் சேதமாகப்பட்டமையினால் அவ் வீதியூடாக செல்கின்ற வலையமைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது.
இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகிறார்கள்.