கொடிகாமம் புத்தூர் சந்தி பகுதியில் விபத்து!

யாழ் தென்மராட்சி கொடிகாமம் புத்தூர் சந்திப்பகுதியில் நேற்று பிற்பகல் ஐந்து மணி அளவில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

கொடிகாமத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ஹெயஸ் வேனும், எதிர்த்திசையில் பயணித்த கெப் ரக வாகனமும் மோதி குறித்த விபத்து சம்பவித்துள்ளது.

விபத்துக்குள்ளான ஹெயஸ் வாகனம் பலத்த சேதங்களுக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் தெய்வாதீனமாக எதுவித உயிர்ச்சேதங்களும் ஏற்படவில்லை என எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த விபத்து சம்பவிப்பதற்கு காரணமான கெப் ரக வாகனத்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.