நீர்கொழும்பு ஆண்டியம்பலம் பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று (23) பிற்பகல் 2.30 மணியளவில் நீர்கொழும்பு மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு விட்டு தப்பிச் சென்று கொண்டிருந்தபோது அவர்களை பொலிஸார் துரத்திச் சென்றனர்.
அங்கு மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் பொலிஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
இதனையடுத்து பொலிஸார் பதில் தாக்குதல் நடத்தியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
22 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.
மற்றைய நபரும் காயமடைந்து நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.