கொழும்பில் பதற்றம்  : தடை உத்தரவு பிறப்பிப்பு

கொழும்பு – புறக்கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக தற்போது போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

முன்மொழியப்பட்டுள்ள அடிமை தொழிலாளர் சட்ட திருத்தங்களை உடன் மீளப்பெறவும், EPF மற்றும் ETFஐ கொள்ளையடிக்க வேண்டாம் என வலியுறுத்தியும் இந்த போராட்டம் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த போராட்டத்தில் அனைத்து தொழிலாளர் சங்கங்களும் இணைந்துள்ளன.

போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளவர்கள், கடன் மறுசீரமைப்பு திட்டத்தின் பெயரில் உட்பட தொழிலாளர்களின் பணத்தை கொள்ளையடிப்பதை நிறுத்த வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இன்றைய தினம் தொழிற்சங்கங்கள் சிலவற்றின் உறுப்பினர்கள் கொழும்பின் சில வீதிகளுக்கு பிரவேசிப்பதைத் தடுத்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

அதன்படி, ஒல்கோட் மாவத்தை, யோர்க் மாவத்தை, பேங்க் வீதி, லோட்டஸ் வீதி, செத்தம் வீதி போன்றவற்றிற்குள் நுழைவதைத் தடுத்து இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்க வேண்டாம் எனவும் கோட்டை மேலதிக நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.