கொழும்பில் விதைப்பை அகற்றும் மோசடி அம்பலம்.

சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை எனக் கூறி கொழும்பு – புளுமண்டல் பகுதியில் வசிக்கும் ஆண்ணொருவரின் விதைப்பையை அகற்றுவதற்கு திட்டமிடப்பட்ட மோசடி ஒன்று தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

கொழும்பு – பொரளை தனியார் வைத்தியசாலை ஒன்றில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக சிங்கள தேசிய நாளிதழ் ஒன்று இன்று (03) செய்தி வெளியிட்டுள்ளது.

சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்கென கூறி ஒரு கோடியே அறுபது இலட்சம் ரூபாயை வழங்கி குறித்த ஆணின் விதைப்பையை அகற்ற திட்டமிடப்பட்டதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்த அறுவைச் சிகிச்சைக்காக இணங்கிக்கொள்ளப்பட்ட பணம் உரிய காலத்தில் வழங்கப்படாமையை அடுத்து மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் பின்னர் அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

இதன்போதே, குறித்த விதைப்பையை அகற்றும் மோசடி குறித்த தகவலும் வெளியாகியுள்ளது.

இந்த அறுவைச் சிகிச்சை சட்டவிரோத வலையமைப்பாக மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.