விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிக் பாஸ் நிகழ்வில் கலந்துகொண்டுள்ள சவுந்தர்யா நஞ்சுண்டன் தன் காதல் பற்றி சக போட்டியாளர்களிடம் கூறியிருக்கிறார். அவர் கூறியதாவது, ஸ்கூலில் இருந்து காலேஜ் வரைக்கும் ஒரு லவ் இருந்துச்சு. ஆனால் அது புட்டுக்கிச்சு. அவர் என் கெரியருக்கு சப்போர்ட் பண்ணல. நான் காலேஜ் படிக்கும்போது அவர் என்னை ரோட்டில் வைத்து அடித்தார் என்றார்.
அப்பொழுது நான் மாடலிங் செய்தேன். அப்ப தான் என் கெரியர் துவங்கியது. போட்டோஷூட் புகைப்படங்களை எல்லாம் ஹிடன் ஃபோல்டர்ஸில் வச்சிருந்தேன். அந்த பையனுக்கு மாடலிங் பிடிக்காது என்பதால் புகைப்படங்களை மறைத்து வைத்தேன். அப்போ ஃபேஷன் டிசைனிங் படித்துக் கொண்டிருந்தேன்.என்னால் மாடலிங்கையும் விட முடியவில்லை. அந்த பையனையும் விட முடியவில்லை என சவந்தர்யா மேலும் தெரிவித்தார்.
ஒரு நாள் என் போனில் போட்டோஷூட் புகைப்படங்களை எல்லாம் பார்த்துட்டான். நான் உண்மையாக இருந்தேன். அவன் மாடலிங் பண்ணக் கூடாதுனு சொல்லிட்டான். அவன் அப்பொழுது மரைன் என்ஜினியரிங் படிச்சுக்கிட்டு இருந்தான் என்றார். அதை கேட்ட விஜே விஷாலோ அந்த ஆளை கல்யாணம் பண்ணியிருந்தால் அவர் எப்படியும் கடலுக்கு போயிருப்பார். நீ மாடலிங் பண்ணியிருக்கலாம் என்றார்.
என் போனில் போட்டோஸ் பார்த்தான். பிரெண்ட்ஸ் எல்லாம் இருக்கும்போது கூட நான் அவனிடம் அடி வாங்கியிருக்கேன். ஒரு முறை சாஸ் பாட்டிலில் எல்லாம் அடி வாங்கியிருக்கிறேன். அவருக்கு அடிக்கடி கோபம் வரும். கோபம் வந்தால் என்னை அடிப்பார். +1ல் இருந்தே லவ் பண்ணி காலேஜ் வரைக்கும் போனது. ஃபர்ஸ்ட் லவ் என்பதால் அவர் என்ன செய்தாலும் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டே இருந்தேன். நான் ரொம்ப உண்மையாக லவ் பண்ணிட்டேன் என்றார் சவுந்தர்யா.
எவ்வளவு தைரியம் இருந்தா போய் போட்டோஷூட் பண்ணுவ, உனக்கு எவ்ளோ வாட்டி சொன்னேன். அந்த மாதிரி ஒர்க் பண்ணக் கூடாதுனு, போட்டோஷூட் பண்ணாத பண்ணாதனு. உனக்கு என்னை விட உன்னுடைய அது தான் முக்கியமா?.மாடலிங் என்ன கொடுக்கும் உனக்கு?. உன்னை சுடிதார் தான போடச் சொன்னேன். இப்ப கூட ஏன் ஜீன்ஸ் போட்டு வந்த?. எவ்வளவு கேவலமாக பண்ற. நீ வெளிநாட்டுக்கே போனாலும் சுடிதார் தான் போடணும்னு ரோட்டில் வைத்து திட்டினான். எனக்கு ரொம்ப அசிங்கமா போச்சு. எல்லோரும் என்னை பார்த்தாங்க. அவன் என்ன அடிச்சுட்டு போயிட்டான். நான் அழுது அழுது வீசிங் வந்துடுச்சு. மருத்துவமனைக்கு போனேன். அதன் பிறகு நானே உணர்ந்தேன். என்ன தான் இருந்தாலும் அடிக்கக் கூடாது என்பதை உணர்ந்தேன். இதை என் வீட்டில் சொன்னதே இல்லை என்றார் சவுந்தர்யா.