சிங்கப்பூர் அரசு 16 வகை பூச்சிகளை உட்கொள்ள அனுமதி

வெட்டுக்கிளி, தேனீ, புழுக்கள் என 16 பூச்சியினங்களை மனிதர்கள் உணவாக உட்கொள்ள சிங்கப்பூர் அரசு அனுமதி அளித்துள்ளது. 

இது உடனடியாக அமலுக்கு வருவதாக அந்நாட்டு உணவுப் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

வனப்பகுதியில் இருந்து இந்த பூச்சிகளை பிடித்து உண்பதற்கு அனுமதி இல்லை என்றும் குடியிருப்புகளில் வளர்த்தோ இறக்குமதி செய்தோ மட்டுமே உணவாக பயன்படுத்தலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

பூச்சிகளை புரோட்டீன் ஆதாரத்திற்கான மாற்று வழியாக பயன்படுத்த ஐநா உணவு மற்றும் வேளாண் அமைப்பு ஊக்குவித்து வரும் நிலையில், சிங்கப்பூர் அரசு இந்த அனுமதியை வெளியிட்டுள்ளது.