சிறுவர்களின் மந்தபோசனை நிலைமை அதிகரிக்கலாம் என எச்சரிக்கை.

இலங்கையில் சிறுவர்களின் மந்தபோசனை நிலைமை மேலும் மோசமாக  அதிகரிக்கலாம்  என யுனிசெவ் எச்சரித்துள்ளது.

யுனிசெவ் அமைப்பின் இலங்கைக்கான பேச்சாளர் பிஸ்மார்க் சுவாங்ஜின் இதனை தெரிவித்துள்ளார்.

யுனிசெவ் அமைப்பின் மதிப்பீட்டின் படி தாங்கள் உரையாடிய பத்து குடும்பங்களில் ஏழு குடும்பங்கள் உணவை குறைத்துக்கொண்டுள்ளதாக தங்களிடம் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகில் சிறுவர்கள் மந்தபோசனையால் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இலங்கை ஏழாவது இடத்திலும் பிராந்தியத்தில் இரண்டாவது இடத்திலும் உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் இலங்கையில் சிறுவர்களின் மந்தபோசனை நிலைமை மோசமாக பாதிக்கப்படலாம் எனவும் யுனிசெவ் அமைப்பின் இலங்கைக்கான பேச்சாளர் பிஸ்மார்க் சுவாங்ஜின் அச்சம் வெளியிட்டுள்ளார்.