சிவப்பு எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் புயல் காற்று காரணமாக இன்றும் வளிமண்டளவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 60 தொடக்கம் 70 கிலோ மீற்றர் வரை வீசக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவ மழையின் தீவிரம் காரணமாக, நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் கொந்தளிப்பாகக் காணப்படுவதாகவும் எனவே மீள் அறிவித்தல் வரும்வரையில் மீன்பிடி மற்றும் கப்பல் போக்குவரத்தில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு கடற்றொழில் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

வங்காள விரிகுடா மற்றும் அரபிக் கடல் பகுதியில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 முதல் 70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மறு அறிவித்தல் வரை, கடலோர மக்களை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் கடற்றொழில் திணைக்களம் அறிவித்துள்ளது.

தற்போது பெய்து வரும் பருவ மழையினால் அனர்த்தம் ஏற்பட்டால், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அவசர அழைப்பு இலக்கமான 117 க்கு அறிவிக்குமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.