சீரற்ற காலநிலையால் 10,299 பேர் பாதிப்பு

நிலவும் சீரற்ற காலநிலையால் 3,518 குடும்பங்களைச் சேர்ந்த 10,299 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அனுராதபுரம் – கிழக்கு நுவரகம், பலாத்த பகுதியில் பெய்த கடும் மழை காரணமாக மரங்கள் முறிந்து வீழ்ந்ததில் இருவர் காயமடைந்துள்ளனர்.

இதேவேளை இரத்தினபுரி மாவட்டத்தில் நிவிதிகல, கொடகவெல மற்றும் பலாங்கொடை ஆகிய பகுதிகளில் பலத்த காற்று வீசியமையால் மரங்கள் முறிந்து வீழ்ந்ததில், 3 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

அத்துடன் நிலவும் கடும் மழை காரணமாக களுத்துறை மாவட்டம் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.