ஜனாதிபதி ரணில் – பிரதமர் மோடி  இடையே  4 ஒப்பந்தங்கள் கையெழுத்து!

ஜனாதிபதி ரணில் – பிரதமர் மோடி  இடையே  பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. இதில் இரு நாட்டு பரஸ்பர உறவுகள் குறித்தும் பல்வேறு விஷயங்கள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.  

மேலும் இந்தியா இலங்கை இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் உயர்த்துவது,வலுப்படுத்துவது குறித்தும் பேசப்பட்டதாக  கூறப்படுகிறது.

இதையடுத்து,  UPI பரிவர்த்தனையை இலங்கையில் அனுமதிக்க  ஒப்பந்தம்,நாகை – இலங்கை காங்கேசன்துறை இடையே பயணிகள் படகு போக்குவரத்து உள்பட 4 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.

இதேவேளை இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இன்று (21) காலை டெல்லியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.