கிழக்கிலங்கையில் தாயொருவர் தமது பெண் குழந்தைகளை தவிக்க விட்டு சென்ற நிலையில், குழந்தைகள் கண்னீர் விட்டு கதறி அழும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெருவில் அனாதை மாதிரி தம்மை விட்டு சென்றதாக அந்த பிஞ்சு குழந்தைகள் அழுதபடி கூறுகின்றனர்.
அந்த காணொளியில் சிறுமிகள் கூறுகையில்,
“எங்களை விட்டுட்டு போய்விட்டீர்களே அம்மா,
எங்கே இருக்கின்றீர்கள்,
நாங்க தான் முக்கியம் என சொல்வீர்களே,
இப்பொழுது ரோட்டில் எங்களை அநாதையாக விட்டு சென்று விட்டீர்களே.”
தயவு செய்து வாருங்கள் அம்மா, நாங்கள் சாப்பிட்டோமா இல்லையா என்பது கூட தெரியாது அனாதையாக விட்டுச்சென்றீர்களே , நாங்க இல்லாம எப்படி இருக்கின்றீர்கள், நாங்க உங்களுக்கு முக்கியம் இல்லையா , எங்களை பார்க்க வாங்கம்மா என கேட்டு சிறுமிகள் அழும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பார்ப்பவர் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது .