தமிழ்நாட்டிற்கு தற்போது நல்ல தலைவர்கள் தேவை ; விஜய்

தமிழ்நாட்டிற்கு தற்போது நல்ல தலைவர்கள் தேவை என்பதுடன், அரசியல் ரீதியாக மட்டுமல்லாமல், துறை ரீதியாகவும் நல்ல தலைவர்களே தேவை என ‘தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.

10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழகம் முழுவதும் முதலிடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத் தொகை மற்றும் சான்றிதழ்களை வழங்கும் நிகழ்வில் அவர் இதனை தெரிவித்தார்

இதில் கோவை, ஈரோடு, மதுரை உள்ளிட்ட 21 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகையை விஜய் வழங்கி வைத்துள்ளார்.

இந்த நிகழ்வில், 750 மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்பட 3,500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.