குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான ட்ரம்ப் பெரும்பான்மைக்கு 270 வாக்குகள் தேவை என்கிற பட்சத்தில், அதை விட அதிகமான வாக்குகளை பெற்று வெற்றி அடைந்துள்ளார் என்று அமெரிக்க செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. இந்த வகையில், அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் மொத்தமுள்ள 50 மாகாணங்களிலும் நவம்பர் 5 ஆம் தேதி நடைபெற்று முடிந்தது.
இதில், ஜனநாயக கட்சியின் வேட்பாளராக கமலா ஹாரிஸும் , குடியரசுக் கட்சியின் வேட்பாளராக டொனால்ட் ட்ரம்ப்பும் களம் கண்டனர்.
அமெரிக்காவில் ஒட்டுமொத்தமாக 538 வாக்காளர்கள் குழு உறுப்பினர்கள் உள்ளனர். இதில் குறைந்தது 270 உறுப்பினர்களின் வாக்குகளை பெறும் வேட்பாளர், அ தேர்தலில் வெற்றி பெற்றவர் என்று அறிவிக்கப்படுவார்.
இலங்கை நேரப்படி இன்று காலை 5 மணி அளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அப்போதிருந்தே குடியரசுக் கட்சியின் வேட்பாளராக டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார்.
இதன்படி, அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியாக. குடியரசுக்கட்சியை சேர்ந்த ட்ரம்ப் பொறுப்பேற்க உள்ளார்.