தாமதமாக பந்து வீசியதால் அணி தலைவருக்கு அபராதம்!

குஜராத் டைட்டன்ஸ் அணியின் தலைவர் சுப்மன் கில்லுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை அணியுடன் நேற்று முன்தினம் இடம் பெற்ற போட்டியில் குஜராத் அணி தாமதமாக பந்து வீசியதால் அணித்தலைவர் சுப்மன் கில்லுக்கு இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இவருக்கு போட்டி கட்டணத்தில் 12 இலட்சம் ரூபாய் ( இந்திய ரூபாய்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நேற்று முன்தினம்  போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 63 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றிருந்தது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 206 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
 
அணி சார்பில் அதிகபடியாக அதிரடியாக துடுப்பெடுத்தாடிய சிவம் துபே 51 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ரச்சின் ரவீந்திர ஆகியோர் தலா 46 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர்.

இதற்கமைய, 207 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 143 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.

துடுப்பாட்டத்தில் குஜராத் அணியின் சாய் சுதர்சன் 37 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.