யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிறந்து நான்கு நாட்களேயான பெண் சிசு தாய்ப்பால் புரைக்கேறி உயிரிழந்துள்ளது.
யாழ்ப்பாணம், மயிலிட்டி வடக்கு பகுதியை சேர்ந்த தம்பதியினரின் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
குறித்த தம்பதியினருக்கு கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் குழந்தை பிறந்துள்ளது.
இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை குழந்தைக்கு பால் ஊட்டிய பின்னர் குழந்தை அசைவற்று இருந்த போது, வைத்தியர்கள் குழந்தையை பரிசோதித்த நிலையில், குழந்தை உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளது.
உடற்கூற்று பரிசோதனையின் போது, தாய்ப்பால் புரக்கேறியதில் குழந்தையின் மூச்சுக் குழாய்க்குள் பால் சென்றமையால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மரணம் சம்பவித்ததாக அறிக்கை இடப்பட்டது.