பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் பெண் மருத்துவர் ஒருவர் தனது காதலனின் அந்தரங்க உறுப்பை வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து அப்பெண்ணின் மீது கொலை முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.
காதலன் சிகிச்சைக்காக பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவரின் காதலன் மதுரா தொகுதியில் உள்ள கவுன்சிலர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இருவருக்குமிடையில் , கடந்த 5 ஆண்டுகளாக தொடர்பு இருப்பதாகவும் ஆனால் அவர் தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்து வருவதாக குறித்த பெண் மருத்துவர் தெரிவித்துள்ளார்.
எனினும், பின்னர் பதிவுத் திருமணத்திற்கு காதலன் சம்மதம் தெரிவித்துள்ளார். அதன்படி, காதலி திருமணத்திற்காக ஏற்பாடுகளை செய்த போதும் காதலன் திருமணத்திற்கு வரவில்லை.
அதன் பிறகு, காதலனை தனது வீட்டிற்கு வரவழைத்த காதலி, அங்கு வைத்து அவரது அந்தரங்க உறுப்பை வெட்டியதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனால் வலியால் துடித்த காதலனின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
அதற்கமைய , கைதானவர் ஹாஜிபூரைச் சேர்ந்த 25 வயதான பயிற்சி மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.