துருக்கியில் சுரங்கத்தில் வெடிப்பு. ; 28 பேர் பலி. : 100க்கு மேற்பட்டோர் பாதிப்பு

வடக்கு துருக்கியின் பார்டின் மாகாணத்தில் நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் குறைந்தது 28 பேர் உயிரிழந்துள்ளனர். என தெரிவிக்கப்படுகின்றது.

இவ்  வெடிப்பு சம்பவம் நேற்று(14.10.2022) இடம்பெற்றுள்ளது.

வெடிப்பின் போது சுமார் 110 பேர் சுரங்கத்தில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களில் அரைவாசி பேர் 300 மீட்டருக்கும் அதிகமான ஆழத்தில் இருந்தனர் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெடிப்பின் பின்னர்,11 பேர் மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக துருக்கியின் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த வெடிப்பு சுமார் 300 மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

இந்நிலையில், சுமார் 300 முதல் 350 மீற்றர் வரையிலான ‘ஆபத்தான’ பகுதியில் சுமார் 49 பேர் பணிபுரிந்து வருவதாக உள்துறை அமைச்சர்  தெரிவித்துள்ளார்.

வெடிப்புக்கான காரணம் தொடர்பில் எவ்வித தகவல்களுடன் வெளிவரவில்லை.