தேசியத் தலைவர் உருவாக்கிய கூட்டமைப்பு இன்று இல்லை. ; சி.வி.கே.சிவஞானம்.

தேசிய தலைவர் உருவாக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று இல்லை என வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

” தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்று ஒரு கட்சி இல்லை என பங்காளிக் கட்சிகள் கூறியிருந்தாலும், அவருடைய பதவி தொடர்பில்  பங்காளிக் கட்சிகள் இன்று வரைக்கும் எதனையும் கூறவில்லை. இப்படி இருக்கின்ற சூழ்நிலையில்   தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கான ஒரு தலைவரை தேடுவதில் திரு சம்மந்தன் அவர்கள் ஏதாவது ஒரு முயற்சி செய்கின்றாரா ? என   ஊடகவியலாளர் ஒருவர்  வடமாகாண அவைத்தலைவர்   சி.வி.கே.சிவஞானம் அவர்களிடம் கேள்வி  கேட்கப்பட்ட போதே இவ்வாறு தெரிவித்தார்.

அப்படி அவர் தேடுவதானால் இந்த 2020 நாடாளுமன்ற தேர்தல் முடிந்த உடனே அவர் அதை செய்திருக்க வேண்டும்.  என்னை பொறுத்தவரையில் தேசிய தலைவர் உருவாக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்றைக்கு இல்லை என்பதே என்னுடைய நிலைப்பாடு. அப்படியிருக்கையில் அதற்கு அவர் புதிய தலைவரை தேடுகிறார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

  சரியோ பிழையோ அவரை விடுத்து மற்ற இரு கட்சிகளும் தாங்கள் தான் தலைவர் என்றும் தாங்கள் தான் கூட்டமைப்பு என்றும் சொல்லிக்கொண்டு இருக்கின்றனர்.
தலைவர் பிரபாகரன் உருவாக்கிய  கூட்டமைப்பு  இன்றைக்கு இல்லை.

ஆனால் இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இல்லை என்றே கூற வேண்டும். அதற்கு ஒரு தலைவரை சம்பந்தன் தேடினால் அது நகைச்சுவையாக தான் முடியும். ”என  வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.