பொதுஜன பெரமுணவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவின் மனைவி லிமினி அதிகாலை நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
லிமினி வினோஜா வீரசிங்க மற்றும் அவரது தகப்பனாரான சட்டத்தரணி திலகசிறி வீரசிங்க ஆகியோர் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்த நேரம் இன்று (22.09.2024) அதிகாலை 3.30 மணியில் எமிரேட்ஸ் விமானம் மூலம் டுபாய்க்குப் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
முன்னதாக நேற்று முன்தினம் நாமல் – லிமினி தம்பதியின் இரண்டு குழந்தைகள், லிமினியின் தாயார் மற்றும் பணிப்பெண் ஆகியோர் நாட்டை விட்டும் வெளியேறிருந்தனர்.