நீரில் மூழ்கி இருவர் பலி

நாட்டின் வெவ்வேறு பிரதேசங்களில் பெண் ஒருவர் உட்பட இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த அனர்த்தங்கள் நேற்று (27) இடம்பெற்றுள்ளன.

இப்பலோகம கலா ஏரியில் நீராடச் சென்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி கலாவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதே உயிரிழந்துள்ளார்.

உருகுடா வெலிபென்ன பிரதேசத்தை சேர்ந்த 47 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, எஹட்டுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகுலேவ குளத்தில் குளிப்பதற்குச் சென்ற பெண் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

ஹெட்டிகம, மகுலாவ பிரதேசத்தில் வசித்து வந்த 58 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.