பங்களாதேஷின் – சிட்டக்கொங் மாவட்டத்தில் இடம்பெற்ற விபத்தில் 11 பேர் பலியானதுடன் 5 காயமடைந்துள்ளனர்.
சிறியரக பேருந்து ஒன்று தொடருந்துடன் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
பாடசாலை மாணவர்களை அழைத்து சென்ற பேருந்தொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
உயிரிழந்தவர்களில் 7 மாணவர்களும் அடங்குவதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதுகாப்பற்ற தொடருந்து கடவையில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
காயமடைந்தவர்களின் நிலைமை கவலைகிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.