பங்களாதேஷில் வன்முறை ; 105 பேர் பலி 

பங்களாதேஷில், பல்கலைக்கழக மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம் வன்முறையாக வெடித்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 105 ஆக அதிகரித்துள்ளது எனவும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தை தொடர்ந்து, பங்களாதேஷில் அரச தொலைக்காட்சி தலைமையகத்துக்கும் தீ வைக்கப்பட்டுள்ளதால் அங்கு பதற்றமான  சூழல்  அதிகரித்துள்ளதாகவும்  அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

அரச வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு முறையில் சீர்திருத்தம் செய்யக்கோரி அந்நாட்டு பல்கலைக்கழக மாணவர்களால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வன்முறை அதிகரித்ததன் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும்  இணையை சேவையை அரசு முடக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது