பப்புவாநியுகினி 2000க்கும் அதிகமானவர்கள் பலி!

பப்புவாநியுகினி மண்சரிவில் சிக்கி 2000க்கும் அதிகமானவர்கள் காணாமல்போயிருக்கலாம் என அச்சம் வெளியாகியுள்ளது.

வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பேரிடர் காரணமாக 2000க்கும் அதிகமானவர்கள் மண்ணில் புதையுண்டிருக்கலாம் என பப்புவா நியுகினியின் தேசிய முகாமைத்து நிலையத்தின் இயக்குநர் கடிதமொன்றில் தெரிவித்துள்ளார்.

இடிபாடுகள் காரணமாக மீட்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் உயிரிப்பு குறித்த துல்லியமான புள்ளிவிபரங்களை பெற்றுக்கொள்வது கடினமாக உள்ளது.

சில பகுதிகளில் பத்துஅடி ஆழத்தில் இடிபாடுகள் காணப்படுகின்றன மேலும் இவற்றை அகற்றுவதற்கு போதிய இயந்திரங்கள் அற்ற நிலையும் காணப்படுகின்றது.

ஐக்கிய நாடுகள் 670 பேர் காணாமல்போயுள்ளனர் என தெரிவித்துள்ள நிலையில் மிகக்குறைவானவர்களின் உடல்களே மீட்கப்பட்டுள்ளதாக பப்புவா நியுகினி தகவல்கள் தெரிவிக்கின்றன

எங்கா பிராந்தியத்தில் ஏற்பட்ட மண்சரிவில் பல கிராமங்கள் முற்றாக அழிந்துபோயுள்ளன, ஒரு கிலோமீற்றர் தொலைவிற்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

மண்சரிவிற்கு முன்னர் அந்த பகுதியில் 3800 பேர் வசித்தனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன