பயணிகள் பஸ் விபத்து  : 17 பேர் பலி.

பங்களாதேஷில் பயணிகள் பஸ்ஸொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து குளத்திற்குள் விழுந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்றுக் காலை 9 மணியளவில்   சுமார் 60 பயணிகளை ஏற்றிக்கொண்டு பயணித்த பஸ்ஸொன்றே பரிஷால் – குல்னா நெடுஞ்சாலையில் வைத்து இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்நிலையில் இவ்விபத்தில் மூன்று குழந்தைகள் உட்பட 17 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும்,  35 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.