பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தை தங்களது இரண்டாவது தலைநகராக மாற்றப்போவதாக தலிபான்கள் எச்சரித்துள்ளனர்.
வீடியோ ஒன்றை வெளியிட்ட தலிபான் அதிகாரி அப்துல் பாசிர் ஷெர்சாடி, ஒவ்வொரு ஆப்கானிஸ்தானியரும் பாகிஸ்தானை வெறுப்பதாக தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானுக்கு 5,000 ஆண்டுகால வரலாறு இருப்பதாகவும், அதை எவ்வாறு பாதுகாப்பது என்பது தங்களுக்குத் தெரியும் எனவும் தெரிவித்த அப்துல் பாசிர், பாகிஸ்தான் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்த ஆயிரக்கணக்கானோர் இருப்பதாகவும் எச்சரித்தார்.