தெற்கு பாகிஸ்தானின் பாலூசிஸ்தான் மாகாணத்தில் கனமழை பெருவெள்ளத்தில் 8 அணைகள் உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்ததில் 77 பேர் உயிரிழந்தனர்.
விடிய விடிய பெய்த மழையால் குடியிருப்பு கூரைகள் இடிந்து விழுந்து பலர் படுகாயம் அடைந்தனர்.
கனமழை பெருவெள்ளத்தில் அணைகளின் மதகுகள் உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது.
வெள்ள நீரில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் அடித்துச் செல்லப்பட்டதில் 77 பேர் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
நூற்றுக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர்.