பாணின் விலையில் ஏற்பட்ட மாற்றம்.  : பாண் சிறிதானது.

கடந்த நாட்களில் பாணின் விலை சடுதியாக அதிகரிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்றைய தினமும் பாணின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இதற்கமைய, சில வெதுப்பக உரிமையாளர்கள் நிர்ணயிக்கப்பட்ட நிறையை விட குறைவான நிறையுடைய ஒரு இறாத்தல் பாண் 190 ரூபாவிற்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் சில வெதுப்பக உரிமையாளர்கள் ஒரு பாணின் எடையை 300 அல்லது 350 கிராம் வரை குறைத்து அந்த விலைக்கு விற்பனை செய்வதாக அதன் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த வாரம் 450 கிராம் நிறையுடைய ஒரு இறாத்தல் பாணின் 300 ரூபா வரையில் விற்பனை செய்யப்பட்டது.

கோதுமை மாவின் விலை அதிகரிப்பை அடுத்தே, இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், நாட்டில் கடுமையான கோதுமை மா தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

பேக்கரி உற்பத்திப் பொருட்களுக்கு கோதுமை மா பயன்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் கோதுமை மாவுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுவதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன கூறியிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.