தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் மதுபோதையில் பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை கத்தியால் குத்தி கொலை செய்த இளம்பெண் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
முலுகு கிராமத்தை சேர்ந்த 30 வயதான ஸ்ரீனு என்பவர், அதே கிராமத்தை சேர்ந்த 25 வயது இளம் பெண் ஒருவர் வெளியில் செல்லும்போதெல்லாம் கடந்த சில மாதங்களாக பின்தொடர்ந்து சென்று தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் நேற்று இளம்பெண் வீட்டில் இருந்தபோது குடிபோதையில் தள்ளாடியபடி சென்ற ஸ்ரீனு, அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமைந்த இளம்பெண் கயிற்றால் ஸ்ரீனுவின் கைகளை கட்டி, கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
பின்னர் கத்தியுடன் நேராக காவல் நிலையத்தில் சரணடைந்த இளம்பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.