விஜய் தொலைக்காட்சியின் பிரமாண்ட நிகழ்ச்சி பிக் பாஸ்.
இதன் ஐந்தாவது சீசன் கடந்த ஜனவரி மாதம் நிறைவடைந்தது.
ஐந்தாவது சீசனின் கோப்பையை ராஜு தட்டி சென்றார்.
பிரியங்கா இரண்டாவது இடத்தை பிடித்தார். பிக் பாஸ் 5 ஐ தொடர்ந்து 6 எப்போது துவங்கும் என்று கடந்த சில மாதங்களாக ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.
தற்போது அதற்கான பணிகள் தொடங்கி விட்டதாகவும் போட்டியாளர்களை தேர்ந்தெடுத்து விட்டதாகவும், நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோவின் படப்பிடிப்பு நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், கமல் ஹாசன் தொகுத்து வழங்க உள்ள பிக் பாஸ் சீசன் 6 இன் அதிகாரப்பூர்வமான லோகோவை விஜய் தொலைக்காட்சி வீடியோவாக வெளியிட்டுள்ளது.
மிகவும் வித்தியாசமான முறையில் பிக் பாஸ் சீசன் 6 இன் லோகோ உள்ளது குறிப்பிடத்தக்கது.