முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விசுவமடு ரெட்பானா பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் முதியவர் ஒருவர் பலியாகியுள்ளார்.
குறித்த விபத்து நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியால் பயணித்த முதியவரை மோதியது. குறித்த விபத்தில் முதியவர் படுகாயமடைந்த நிலையில் தர்புரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இறந்தவரின் சடலம் தருமபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.