கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிராமங்களில் எதிர்வரும் திங்கட்கிழமை (20) 12 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக கிளிநொச்சி தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் அறிவித்துள்ளனர்.
பூநகரி வாடியடிச் சந்தியில் அமைந்துள்ள நீர்த்தாங்கியில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தம் மற்றும் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை மாலை 6 மணி முதல் மறுநாள் செவ்வாய்கிழமை (21) காலை 6 மணி வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படும்.
எனவே பொதுமக்கள் இதனை கருத்தில் கொண்டு முன்கூட்டியே நீரை சேமித்து வைத்துக் கொள்ளுமாறு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.