மத்திய கென்யாவில் 40 மீட்டர் உயரமுடைய பாலத்தில் இருந்து பேருந்து ஒன்று ஆற்றுக்குள் கவிழ்ந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது.
மேரு கவுண்டியில் இருந்து நைரோபி நோக்கி நெடுஞ்சாலை வழியாக அதிவேகமாக சென்று கொண்டிருந்த பேருந்து நித்தி ஆற்றின் மீது செல்லும் பாலம் வழியாக சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பு மீது மோதி சென்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.