வரகாபொல பிரதேசத்தில் நேற்றைய தினம் முதல் பெய்து வரும் தொடர் மழை காரணமாக வரகாபொல மெனெரிப்பிட்டிய பகுதியில் உள்ள வீடு ஒன்று மண்சரிவினால் முற்றாக இடிந்துள்ளது.
இடிபாடுகளில் சிக்கிய நால்வர் இன்று காலை பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டு வரக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வீட்டில் நான்கு பேர் இருந்ததாகவும், இடிபாடுகளில் இருந்து முதலில் வெளியே வந்த தாய், அக்கம் பக்கத்தினரை எச்சரித்து, தந்தை, மகள் மற்றும் மகளின் நண்பர் ஒருவரையும் காப்பாற்றியுள்ளார்.
ஏற்கனவே வரகாபொல நகரம் நீரில் மூழ்கியதால் 1990 சுவ சரிய நோயாளர் காவு வண்டியை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து வரகாபொல பொலிஸாரின் ஜீப் வண்டி ஒன்று வந்து காயமடைந்தவர்களை உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்துள்ளது.