கண்டி – அக்குறணை – துணுவில பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்கள் உயிரிழந்துள்ளனர்.
கடும் மழை காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் 18 மற்றும் 19 வயதுடைய இருவரே உயிரிழந்துள்ளதாக கண்டி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
விபத்தின்போது உயிரிழந்தவர்களின் தாய், தந்தை மற்றும் மற்றுமொரு சகோதரர் என ஐந்து பேர் வீட்டில் இருந்துள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் மற்றுமொரு சகோதரனும் படுகாயமடைந்து கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும் இந்த விபத்தில் தாய் மற்றும் தந்தைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.