வரக்காபொல – தும்பிலியத்த பகுதியில் மண் மேடு சரிந்து வீட்டின் மீது விழுந்ததில் நால்வர் சிக்குண்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மண்சரிவில் சிக்குண்ட நால்வரில் ஒருவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மண் சரிவில் சிக்குண்ட ஏனைய மூவரையும் மீட்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.