மன்னாரில் வியாழக்கிழமை (14) மதியம் முதல் நேற்று வெள்ளிக்கிழமை (15) அதிகாலை வரை பெய்த கடும் மழை காரணமாக கட்டுக்கரை குளம் வான் பாய ஆரம்பித்துள்ளதுடன் மன்னார் – யாழ்ப்பாணம் பிரதான வீதி உள்ள பாலியாறு பெருக்கெடுத்துள்ளது.
குறிப்பாக பாலியாறு, சிப்பியாறு, முழுவதும் நிறைந்து வீதிக்கு மேலாக நீர் பாய்ந்து வருவதுடன் அருகில் உள்ள கிராமங்கள் முழுவதும் வெள்ள பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
தொடர்ச்சியாக மழையுடன் கூடிய காலநிலை நிலவும் பட்சத்தில் பல நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இடம் பெயர வேண்டிய நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.