கொழும்பு – கிராண்ட்பாஸில் இன்று (19) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ‘மன்ன கண்ணா’ என்று அழைக்கப்படும் மாரிமுத்து கணேசன் என்ற பாதாள உலக பிரமுகர் படுகாயமடைந்துள்ளார்.
உந்துருளியில் வந்த இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில், மன்ன கண்ணாவுக்கு தலை மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டது.
இதையடுத்து, ஆபத்தான நிலையில் அவர் மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
பிரபல பாதாள உலக உறுப்பினரான ‘கஞ்சிபானி இம்ரானின்’ தந்தை தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ‘மன்ன கண்ணா’ மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.