மலையக ரயில் சேவை பாதிப்பு!

மலையக ரயில் மார்க்கத்தில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளதால்  மலையக ரயில் சேவை  தடைப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (23) இடம்பெற்றுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை  மேலும் தெரிவித்துள்ளது.  

இதன் காரணமாக மலையக  ரயில்  சேவை தடைப்பட்டுள்ளதாகவும் ரயில்  பாதையில் விழுந்த மரத்தை அகற்றும் பணியில்  ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .  

இதேவேளை மலையக ரயில் சேவை தாமதமாகலாம் எனவும் நாவலப்பிட்டி ரயில்வே கட்டுப்பாட்டு அறை மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .