மான் கொம்புடன் யாழ் பேருந்து நிலையத்தில் ஒருவர் கைது! 

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் மான்கொம்புடன் நின்ற ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மாங்குளத்தில் இருந்து எடுத்து வரப்பட்ட மான் கொம்பை வேறொருவரிடம் கையளிப்பதற்காக காத்திருந்த போது  பொலிஸார்  அவரை கைது செய்தனர்.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.