மாலைதீவு தலைநகர் மாலேயில், கட்டிடமொன்றில் இன்று (10) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.
இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த புலம்பெயர்ந்த பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தில், 9 இந்தியர்களும் ஒரு பங்களாதேஷ் பிரஜையும் உயிரிழந்ததாக மாலைதீவு வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஷாஹித் உறுதி செய்துள்ளார்.
உடல்கள் கடுமையாக எரிந்துள்ளதால், அவற்றை அடையாளம் காண்பது கடினமாக இருப்பதாக அதிகாரிகள் கூறியதாக சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது.