கல்கிரியாகம – திக்வெண்ணாகம பிரதேசத்தில் மின்சாரம் தாக்கியதில் 17 வயது பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கல்விப் பொது தராதர சாதாரணதர பரீட்சைக்குத் தோற்றிய குறித்த மாணவன் பெறுபேறுகளுக்காக காத்திருக்கும் நிலையிலே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தோட்டத்தில் பொருத்தப்பட்டிருந்த வானொலியில் ஏற்பட்ட மின்சார கோளாறை சரி செய்வதற்கு முற்பட்ட போதே மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மின் தாக்குதலுக்குள்ளான மாணவன் ஆபத்தான நிலையில், அடியாகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக தம்புள்ளை மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இருப்பினும், குறித்த மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.