முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்கோ பயிர் செய்கை வெற்றியளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையைப் பொறுத்த வரையில் கொக்கோ பயிர் செய்கையானது இடை , ஈர வலயங்களில் அதிகளவாக பயிரிடப்பட்டு வருகின்றது.
இருப்பினும் உலர் வலயத்திலும் இப்பயிர் செய்கையினை மேற்கொள்ள முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் அமைந்துள்ள மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் கொக்கொ செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அதில் ஒரு முயற்சியாக டாக் சொக்லேட் செய்யும் பரிட்சாத்த முயற்சி வெற்றியளித்துள்ளதாகவும், இதன்மூலம் கொக்கோவில் இருந்து பல்வேறு வகையான பெறுமதி சேர் உற்பத்திகளை மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை கொக்கோவில் அதிகளவு இலிப்பிட்டு, புரதம், மாப்பொருள், நார்பொருள் மற்றும் அத்தியவசியமான அமினோ அமிலங்கள் என்பன காணப்படுவதால் கொக்கோ பயிர் செய்கையை வடமாகாணத்தில் விஸ்தரிப்பதற்கான முன்னாயத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.