அரசியலுக்கு முன் மொத்த சண்டையும் முடிவுக்கு கொண்டு வந்த தளபதி.
விஜய் பற்றிய செய்திகள் என்றாலே பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
அவர் கட்சி ஆரம்பித்ததிலிருந்து கோட், தளபதி 69 என ஒவ்வொன்றும் சோசியல் மீடியாவை கலக்கிக் கொண்டிருக்கிறது.
அதேபோன்று அவருடைய தனிப்பட்ட விஷயங்களும் பரபரப்பை ஏற்படுத்தும். அப்படித்தான் இவருக்கும் இவருடைய அப்பா எஸ் ஏ சந்திரசேகருக்கும் இருக்கும் மனவருத்தம் அனைவருக்குமே தெரியும்.
ஆனால் இதைப்பற்றி விஜய் மௌனம் சாதித்தாலும் எஸ் ஏ சந்திரசேகர் அவ்வப்போது மீடியாவில் உளறி கொட்டி விடுவார்.
அதுவே எரிகிற தீயில் நெய்யை ஊற்றிய கதையாக மாறிவிடும்.
இதற்கு பல உதாரணங்களை சொல்லலாம்.
அதில் முக்கியமானது என்று பார்த்தால் விஜய்யின் அரசியல் வருகைதான்.
இதில் ஆரம்பித்த அப்பா மகன் பிரச்சனை இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது என ஊடகங்களில் செய்திகள் கசிந்து வருகிறது.
இந்நிலையில் விஜய் தன்னுடைய அப்பா மற்றும் அம்மாவுடன் இணைந்து எடுத்துக் கொண்ட போட்டோ வைரலாகி வருகிறது.
அதில் அவர் இருவரின் தோள் மீதும் கையை போட்டு அணைத்தபடி நிற்கிறார்.
இதற்கு முன்பு கூட எஸ் ஏ சந்திரசேகர் உடல் நல குறைவால் சிகிச்சை பெற்ற போது விஜய் அவரை நேரில் சந்தித்து இருந்தார்.
அந்த போட்டோவும் வைரலானது. அதன் பிறகு தற்போது வெளியாகி இருக்கும் இந்த போட்டோ இவர்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை என சொல்லாமல் சொல்லிவிட்டது.
இதன் மூலம் விஜய் பெரும் சர்ச்சையை முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறார்.
மேலும் அரசியல் களம் காண போகும் நேரத்தில் அப்பாவுடன் இருந்த மன வருத்தத்தையும் அவர் பேசி தீர்த்துக் கொண்டுள்ளார்.
அப்படியே மனைவி பிள்ளைகளுடன் இருக்கும் போட்டோவையும் வெளியிட்டால் இன்னொரு வதந்தியும் முடிவுக்கு வரும்.