குடும்ப தகராறு காரணமாக கணவன் தனது மனைவியை குத்தி கொலை செய்த சம்பவம் நேற்று (2024.07.06) மாலை யாழ். கொழும்புத்துறைப் பகுதியில் இடம் பெற்றுள்ளது.
கொழும்புத்துறை ஆனந்தவடலி (ஏவி வீதி) வீதியில் வசித்துவந்த 29 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயான திவீகரன் நிசானி என்ற இளம் குடும்பப்பெண்ணே மேற்படி பரிதாபமாக உயிரிழந்தவராவார்.
கணவன் மனைவிக்கிடையில் தகராறு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் கணவன் மனைவியின் நெஞ்சுப்பகுதியில் கத்தியால் குத்தியதாகவும், படுகாயமடைந்த மனைவி உயிரிழந்துள்ளதாக பொலிசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவருகிறது.
இச் சம்பவம் தொடர்பில் கணவன் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிசார் மேற்கொண்டுள்ளனர்